- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்படி நெல்லிச் சாறுடன் பனங்கற்கண்டு கலந்து
சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். - கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம்
காணாமல் போகும். - தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2
டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி
குணமாகும் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை
சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.