- Palm jaggery is prepared in one of our farmer’s house and they practise traditional method
- பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நரம்பு மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது.
- கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும்.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
- கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம்.
- மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர்.